மணிமாறனின் காதல் - உதயா

என் மனம் பறித்து சென்ற
.............இம்மணிமாரனின் இதயத் துடிப்பே
நாம் செய்த பாவங்கள்தான் என்னவோ ?
.............ஒருவருக்கொருவர் மனதாரக் காதலித்ததா ?

பெண்ணுக்குரிய நாணத்தோடு
.............வனத்தில் நீ பூத்ததால் என்னவோ ?
நான் பெண்ணாகவே மாறி
.............உன் மனதில் சூடப் பறித்தேன்

ஆணுக்குரிய நாணத்தோடு
.............மண்ணில் நான் ஒளித்ததால் என்னவோ ?
காதல் கடவுளாய் நீமாறி
.............என்னை உன் குருதியாக்கிக் கொண்டாய்

இதயங்கள் இரண்டும் கலந்துவிட்டது
.............உள்ளங்கள் இரண்டும் ஒன்றினைத்துவிட்டது
நினைவுகள் எக்கனமும் எனக்கு நீயானாய்
............. உனக்கு நான் ஆனேன்

காதலுக்கு இலக்கணமாய் நம் காதலையோ
.............ஐந்தறிவு ஜீவனிடமும் பேசப்பட்டதே
காதலருக்கு இலக்கணமாய் நம்மை
.............ஈரேழு உலகமும் பேசிக்கொண்டதே

என் உடலில் இருந்து இதயத்துடிப்பையும்
.............உன் உடலில் இருந்து குருதியையும் பிறித்தது
மனிதரால் ஆக்கப்பட்ட விதியா ?
.............சாதியைக் காரணமாக்கிய சதியா ?

இதயத்தின் ஓய்விற்குப் பின்
.............என் உடல்தான் உயிர்வாழுமோ ?
குருதியின் ஓய்விற்குப் பின்
.............உன் உடல்தான் உயிர்வாழுமோ ?

உன் குருதி எம்முடல்மேல் பாய்ந்து
.............உன் ஆன்மா என்னுள் கலக்க
என் இதழ்களோ உன் இதழோடு இணைந்து
.............என் ஆன்ம உன்னுள் கலந்துவிட்டது

மண்ணில் இணையாத நம்காதல்
.............விண்ணிலாவது இணையுமா ?
அங்கேயும் நம்மைப் பிறிக்க
.............சதியின் வேலை தொடருமா ?

எழுதியவர் : udayakumar (22-Feb-15, 9:14 am)
பார்வை : 310

மேலே