உணர்ச்சியா உடல்வளர்ச்சியா காதல்
வானிரண்டு இமைகள் நடுவே
வாழ்வொன்று இருக்குது நெடுக !
கூனென்று ஆகுமுன்னே கூந்தல் அழகு !
பாரெங்கும் சேர்த்த புகழ் பருவத்தில் ஜொலிக்கும்!!
யாரென்றரியா பிஞ்சிலே வஞ்சமில்லை !
பருவத்தில் வந்த ஆமைகள் நெஞ்சிலே
ஒட்டாதுதடுகள் நதிநடுவே ஓடும் மீன்கள் !
கண்டத்தின் கீழ் காட்சியாகி துள்ளும் இருமான்கள் !
உந்தன் இடையழகினால் எந்தனை அள்ள
இருகரம் கோர்த்து விளையாடினோம் சிறுபிள்ளையில்
ஒருவர் முதுகினில் ஒருவர் ஏறினோம் ஒன்றுமறியாமலே
இன்று இருகண் நோக்க கூசுதடி !!
என் இதயத் துடிப்பின் வாசலடி
உன் உடற்கூறுகள் இடம்மாறியே
எந்தன் எண்ணத்தை இடருதடி
முன்பின்னறியா இருவரைபோல்...!
முன்னும் பின்னும் உன்னை பார்க்குதடி
எந்தன் பார்வையின் மாற்றமாய் நீயடி
பார்த்திடாது நீ போகையில்
உன்மேல் மோகம் கூடுதடி !
இடறி விழுந்தோம் ஒருவர்மேல் ஒருவர்
ஒன்றுமறியாவயதில் பதறி எழுந்தோம்
உந்தன் மேனியில் பட்ட என்விரலாலே இன்று !
காட்சி மாற்றம் எதனாலே அறியாமலே காதலென்போம்!!