நகரமா நரகமா

விடிய விடிய
தன்னை
கொலை செய்வதைப்போல்
அழுதுக்கொண்டே இருந்தன
வாகனங்கள் !

விடிந்ததும்
சிதறிய குப்பைகளாய்
வீட்டு வாசலில்
அன்றைய செய்திதாள்!

தெருவில்
எறும்புக்கூட்டங்களாய்
வாிசையாய் காத்துக்கொண்டிருந்தன
வண்ணமயமாய் காலி குடங்கள்!

நீண்ட நேர காத்திருப்பில்
அங்கங்கே
நடந்த சலசலப்பில்
எப்படியோ கிடைத்தது
இரண்டு குடம் தண்ணீா்!

அவசர அவசரமாய்
குளித்துவிட்டு
சமையல் என்று ஏதோ
செய்து விட்டு
கிண்ணத்தில் அடைக்கப்பட்டது
மதிய உணவு!

பேருந்து நிலையத்தில்
மலா் தேடிய வண்டுகளாய்
எதையோ
எதிா்பாா்த்துக்கொண்டிருந்தன
பல விழிகள் !

தேனீக்களாய்
முழுவதும்
அடைத்துக் கொண்டது
வந்த பேருந்து!

எப்படியோ ஊா்ந்து
இடமும் கிடைத்தது
ஒரு காலுக்கு
கடைசி படி !

தொடா்ந்து இருக்கும்
மரங்களைப்போல
ஆங்காங்கே இருந்து கொண்டிருந்தன
பேருந்து நிறுத்தம்!

அலுவலகத்தில்
உதடுகள் மொழிந்து
கொண்டிருந்ததன வருத்தம்
சிலவேளைகள் தாமதம்!

பம்பரமாய்
வேலை செய்தன
கணிப்பொறியில்
விரல்கள்!

எந்த உதடும்
யாாிடமும் பேசாமல்
வாய்மென்று கொண்டிருந்தது
உணவு இடைவேளை!

திரும்பி வந்த
மின்சாரத்தைப் போல்
மறுபடியும் இயங்கின
விரல்கள்!

அங்கங்கே மனம்
மகிழ்ந்து கொண்டிருந்தது
அலுவலக நேரம்
நிறைவு!

சாயங்காலத்தில்
பொருட்களை
வாங்க வந்ததைப் போல
மக்கள் திரள்
கடற்கரையில்!

உஷ்ணத்தை மட்டுமே
உமிழ்ந்து கொண்டிருந்தது
மக்களின் மூச்சுக்காற்றினால்
கடற்கரை!

எல்லாம் முடிந்தது
மீண்டும் உறங்கச் சென்றது
கண்கள்!

மீண்டும்
வாகனங்களின் கதறல்
விழித்துக்கொண்டான்!

ஆம்
நகர வாழ்க்கையும்
நரகமாய் தொிந்தது
கிராமத்திலிருந்து
பணிக்கு வந்தவன்!

எழுதியவர் : கவிபுத்திரன் சபி (24-Feb-15, 9:49 pm)
பார்வை : 682

மேலே