தமஸ் ஆல்வா எடிசன்
இரவிலும் சூரியனை
இருக்கச் செய்தவன் நீ..!
இருள் விலக கார்பன் இழைகளை
சிரிக்கச் செய்தவன் நீ..!
கருவிலே அறிவுக்கண்
விழித்தவன் நீ..!
இளம் பருவினிலே படிப்பினை
துறந்தவன் நீ..!
சோம்பல் என்ற வார்த்தையின்
அர்த்தம் மறந்தவன் நீ..!
சாம்பலையும் சந்தனமாக்கும்
அறிவியலாலன் நீ..!
"விடாமுயற்சி செய்தால்
இயற்கை அன்னையும் தன்
இரகசியங்களை வெளியிடுவாள்"
என கூறி,
வியத்தகு அறிவியல்
உலகிற்கு வித்திட்ட, நீ
பிறந்த இன்றைய தினத்தில் (பிப் -11)
உனை வணங்கும்..
உன் மூளைச் சூட்டின்
கதகதப்பில் குளிர்காயும்
கோடிகளில் ஒருத்தன்..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
