காத்திருப்பு

ஒன்று...
இரண்டு...
மூன்று...
சொல்வது சுலபம் தான்,
இதை கந்துவர நான் அடைந்த நிலை
அறிந்தோர் பல...
அறிவிப்போர் இல...
காற்றுக்கு தெரியும்...
என்னை சூழ்ந்திருந்தும் சுவாசித்தது கொஞ்சம் தான்,
வெறுப்பாய்... நெருப்பாய்...
மரங்களுக்கு தெரியும்...
நான் கூறிய வார்த்தைகள் எவ்வளவு,
ஆசையாய்... கோபமாய்...
கண்ணாடிக்கு தெரியும்...
தூசி படிந்திருக்க காரணம்,
கவனிக்காமல்... காணாமல்...
கைபேசிக்கு தெரியும்...
கை வெட்பமும் உயிர் குறைதலும்
கேட்பதாலும்... பார்பதாலும்...
நான்கு நாட்கள் பிறகு பிரியத்தோடு
வந்தேன்
கடந்து போனாய் என்னை
காணவில்லை உன்னை
முகம்கூட காணவில்லை
சமாதானம் சொல்ல யாருமில்லை...
வீடு செல்லும்வரை கண்டிப்பு
என்மேல்
வீட்டிற்கு வந்ததும் நடிப்பு
அனைவரின் முன்னாள்...
சிரித்து பேசியாகவேண்டும்...
அழவா முடியும், கண்டிந்துகொள்ளதான் முடிமா?
முகமாவது பார்த்திருந்தால் சந்தோஷபட்டிருப்பேன்
ஐந்து நிமிட தாமதம் ஐந்தாம் நாள் கொண்டுசெல்கிறது...!
பெரியோர் சொன்னது சரிதான்
"தீதும் நன்றும் பிறர்தர வாரா"
காத்திருக்கிறேன் காலைப் பொழுதிற்காக...