நனைக்காத மழை-வித்யா

நனைக்காத மழை-வித்யா

இது எதுவரை
என்று நினைத்திருந்தபோது
யாதுமாகி நின்றாய்

நீ இதுவரை
என்றறியும் போது
யாரோவாகிப் போனாய்

நினைவுகளின் வெள்ளப் பெருக்கினில்
மூச்சடைக்கும் போது
காற்றாகிக் காதலுரைத்தாய்
கண் திறந்ததும்
கனவாகிக் கலைந்திருந்தாய்

நுண்ணிய நெருக்கங்களில்
தீண்டா விரல்களும்
தீண்டித் தீண்டி
நனைக்கா மழையும்
புழுக்கமானக் காற்றும்
என்ன சொல்ல வருகிறதென்று
புரிவதே இல்லை எனக்கு

எழுதியவர் : வித்யா (28-Feb-15, 12:02 am)
பார்வை : 141

மேலே