மின்னல்

மதியும் அழகு
புஷ்பமும் அழகு
ஏழ வர்ண
வானவில்லும் அழகு
காதல் வரும் முன்னே!

சருகுகள் அசையும்
சத்தம் பறவைகளுக்கு
சங்கிதம்,
அவள் புன்னகை
சப்தஸ்வரங்கள் .

என் மனதை
பறித்த விழியழகி
சொப்பனங்களில்
தூக்கு கயிறு
இடுகிறாள்.

நான் கவிதை
எழதும் போது
உன் பெயரை
அழுத்தி எழுதினால்
வலிக்குமென்று
இறகால் தடவுகிறேன்.


மண் நிலவை
நினைக்க விண்
நிலவு மின்னல்
வெட்டுகிறது.
அவள் எண்ணங்களும்
மின்னல்தான்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (28-Feb-15, 12:24 am)
Tanglish : minnal
பார்வை : 237

மேலே