வேலை யில்லா பட்டதாரி

படித்து பட்டமும்
பெற்று விட்டேன்
பதிவும் செய்து விட்டேன்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
வயது மூப்பும் ஆகிவிட்டது
பதிவு மூப்பும் ஆகிவிட்டது
பதிவு தபாலில் வேலைக்கான
வாய்ப்பு வருமா என்று
காத்திருக்கிறேன்
இடையில் நடந்தது
என்ன என்று தெரியவில்லை
பதிவிறக்கம் செய்யப்பட்டதோ
பதிவு மூப்பை என்று
நினைக்கும் முன்
என் வயதும் 58-ஐ
கடந்து விட்டது ...!