இதுவும் தெரிவதற்க்கே!

யாரோ ஒருத்தனுக்கு மனைவி
இங்கே இவனுக்கு மனைவி
மற்றொருவனுக்கு இவள் அக்காள்
மடிமீது உள்ள குழந்தைக்கு தாய்
சுரக்கும் பால் இவளுக்கு சோகம்
சுற்றி இருப்பதோ அக்கம் பக்கம்
பாலூட்டும் குழந்தையினை பாசத்தோடு
பரிதவிக்கும் அழுகைக்கு தாலாட்டினால்
நா தொட்டு பார்க்காமல் தாய்பாலில்
நாணமில்லை அழகுதான் முக்கியமாம்
புட்டிபாலில் காட்டிவிட்டால் போதுமென்று
பூரித்து மகிழ்ந்துவிட்டால் தாயவள்
போட்டிருந்த உடைகளிலே நவீனமாய்
புழுங்கவைத்த வியர்வை மறைக்க நறுமணமாய்
கவைகட்டை போன்ற காலுக்குத்தான்
கச்சிதமாய் உடைகளையே இறுக்கி போட்டுவிட்டால்
நெஞ்சிலே இருக்குமிரண்டு கர்வமென்று
நேருக்கு நேர் சொல்வது போல் பேசாமலே
பிஞ்சிலே விதைக்கப்பட்ட அயல் கலாச்சரம்
பிடித்ததனால் தாயவளே பேயானால்
சேலைகட்டி இருந்தாலாவது செந்தமிழச்சியாய்
செல்ல குழந்தைக்கு முந்தானையினை மூடியபடி
பாலூட்டும் பண்பாட்டை பதுக்கிவிட்டு
பழிசொல்லி கிடக்கிறார் இக்காலத்தை
எத்தனையோ கூட்டத்தில் இடையினிலும்
இவள் குழந்தைக்கு பாலூட்ட முடியுமென்று
காமத்தின் கண்களுக்கு கரியை பூசி
கலாச்சார அன்னையவள் மறந்ததனால்
முதியோர் இல்லத்தில் சேர்ப்பது கூட
முன்செய்த தாய் பாலின் துரோகமென்றால்
இப்போது பிள்ளைகளின் பழிவாங்கலை
எவராவது உணர்ந்துவிட்டால் திருந்திவிடுங்கள் !

எழுதியவர் : . ' .கவி (25-Apr-11, 4:08 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 411

மேலே