பிணமாக ஓர்நாள்
பணம்மறந்த மனங்கொண்ட...
பாசவுறவுகள் படைசூழ
மதம்மறந்து மானிடரான..
மக்களிடையே நானிருக்க
சாதிமறந்து சமத்துவமாய்..
சகாகள்வந்து எனைசூழ
பிணமாக ஓர்நாள்..
நான் வாழவேண்டும்
சகலத்திலும் மனிதர் சமமானபோதும்..
சதிமத பணபேதங் கொண்டே..
சர்வமெலாம் திரிந்தாலும் - சமதுவராகின்றோம்..
சடலத்தின்முன் நிற்கின்ற சிலநொடியென்பதால்...
பிணமாகவோர்நாள் நான்வாழ்ந்து ரசிக்கவேண்டும் .
(நண்பர் sabiullah அவர்களின் எதிர்பார்ப்புக்காக இந்த மாறுபட்ட சிந்தனை )