மகாகவி ஈரோடு தமிழன்பன் பற்றி வானம்பாடி கவிஞர் இன்குலாப் -பகுதி 2

மகாகவி ஈரோடு தமிழன்பன் பற்றி வானம்பாடி கவிஞர் இன்குலாப்

நாங்கள் அடுத்தடுத்திருந்தோம்
நட்பிலும்
நாற்காலிகளிகளும்

மாணவ நாட்களில்
வைகைக் கரையின்
மணலூற்றுக்களையும்
நாணற்பூக்களையும்
தென்னந்தோகைகளையும்
அடுத்திருந்த
தியாகராசர் கல்லூரி அரங்கில்
அலைமோதிய கவிதா நிகழ்வில்
அறிமுகமானீர்கள்
கவிதையின் நிறைமுகமாய் ...

புதுக்கல்லூரியில்
பணியாற்ற வந்த முதல் நாளில்
நட்பில் பற்ற நம்கைகள் நீண்டன -
அன்பில் உயிர்க்கும் நம் இதயங்களிருந்து ....

அந்தத் தொடுகை
தொடர்கிறது
இன்றும் இனியும் ....

உச்சரிப்பதற்குக் கவிதைகளும்
உதவுவதற்குக் கைகளுமாய்
இருந்த மனிதர் நீங்கள் ....

நம் மேசையில் குவிந்த
கட்டுரை ஏடுகள் ,
வருகைப் பதிவேடு ,
கிளிக் கூண்டுப் புத்தகங்கள்
இததனைக்கும் அடியில்
சுதந்திரிமாய் விரிந்த
கவிதையின் விளிம்புகளுக்குப்
பூவேலைப்பாடு செய்து கொண்டிருந்தோம்.....

நானும் புலவர் உசேனும் ஊதிய
வெண்சுருட்டுப் புகை மண்டலத்தில்
ஒருபோதும் சுருக்காத
நட்பின் ஒளிமுகம் உங்களது ......

மகாகவி ஈரோடு தமிழன்பன் பற்றி வானம்பாடி கவிஞர் இன்குலாப் (தொடரும் )

எழுதியவர் : இன்குலாப் (1-Mar-15, 2:54 pm)
சேர்த்தது : agan
பார்வை : 73

மேலே