சொர்க்கம் அருகிலே

மொட்டுக்கள் விரிந்ததெப்படி ? முன்பது
முளை விட்டே வளர்ந்ததெப்படி ?

தன்னுள்ளே இருக்கும் சக்தி - அதன்
தன்மை அறிந்து கொண்டதாலே

மொட்டுக்கள் மலர்ந்ததப்படி - முன்பது
முளை விட்டே வளர்ந்ததப்படி...!!

யார் சொல்லித் தந்தார்கள் செடிக்கு ?
வேர் போகுது பூமி துளைத்து....!!

முயன்றால் முடியாதது எது இருக்கு ? எனவே
முயல்பவர்க்கே சொர்க்கம் என வாழ்க்கை இருக்கு...!!

எழுதியவர் : ஹரி (3-Mar-15, 2:36 am)
Tanglish : sorkkam arugiley
பார்வை : 98

மேலே