ஓய்வேனா வீழ்வேனா - உதயா

என் நாட்டிற்கு
அவசியம் தேவை இளைஞ்சர் பட்டாளம்
நாட்டின் வளர்ச்சிக்கா இல்லை
மதுவின் வளர்ச்சிக்கா

ஊருக்கு ஒரு பள்ளி வேண்டுமென்றான் அன்று
தெருவிற்கு ஒரு மதுக்கடையை வைத்துவிட்டான் இன்று
நியாயமாயிது அடுக்குமா அரசாங்கத்துக்கு
பொறுக்குமா என்போல உள்ளத்துக்கு

மதுவின் மயக்கத்தால் மதியிழந்த
அற்பணக்கு பலியாகும் என்நாட்டு
பெண்களின் எண்ணிக்கை
கொஞ்சமா நஞ்சமா

வெறிபிடித்த நாய்களெல்லாம்
வேட்டையாட தொடங்கினால்
கன்னியின் பிணமும் மிஞ்சுமா
கன்னியெனும் பெயர்தான் மிஞ்சுமா

எத்துனை இழப்புகள்
எத்துனை கதறல்கள்
எத்துனை நரபலிகள் அத்துனையும்
அந்த மதுவிற்கு காணிக்கையா

அடே அரசாங்கமே
நீ என் சமூகத்தை
காக்கும் காவலனா
அழிக்கும் காலனா

பரந்த என் சமூகத்தை
குப்பை தொட்டியாக்கியது யார்
அந்த குப்பை தொட்டிற்கு
நஞ்சு ஊட்டும் நயவஞ்சகன் யார்

என் நாட்டின் இளைஞ்சனை
சாக்கடையில் எச்சிலாய் காணும்போதெல்லாம்
கொதித்து எழுகிறது என் குருதி
இதனை அடக்க துடிக்கிறது என் மதி

தனி மனிதனாய் போராடவா இல்லை இல்லை
யார் சொன்னது நான் தனி மனிதனென்று
அந்த மதுவினை அழிக்க துடிக்கும்
ஆயிரம் உள்ளங்களின் உணர்வு நான்

என் செயலால்
அரசால் வீழ்த்தப்படுவேனா
நான் வீழ்ந்தால் என் வீழ்ச்சிற்கு
அர்த்தமில்லாமல் புதைக்கபடுவேனா

என் குருதி நாளம்
வெடித்து சிதறும்போது
சிந்தும் ஒவ்வொரு துளி குருதியிலும்
கோடான கோடி மக்களாய் நானே எழுவேன்

மரணமில்லை எனக்கும்
என் உணர்ச்சிக்கும்
அந்த மதுவிற்கும்
கோடி துணியினை சாட்டும் வரைக்கும்

ஓய்வில்லை எனக்கும்
என் செயலுக்கும்
மதுவெனும் வார்த்தை
அகராதியிலிருந்து நீக்கும் வரைக்கும் ...

எழுதியவர் : udayakumar (5-Mar-15, 8:41 am)
பார்வை : 79

மேலே