தமிழ் நோகக்கூடாது-கவிதாயினி தாமரைக்கு எச்சரிக்கை

தமிழே! தமிழே! தமிழே! என்னுயிரே!
உன் காயம் ஆற மருந்தாய் பாடுகிறேன் என்னுயிரால்.....,
உன்னை போற்றி வாழவேண்டியவர்களே
தூற்றிவிட்டனர் என்று கலங்காதே என் தமிழே!
மின்னல் வெட்டிக்கேட்கும்,வானம் முழங்கிக்
கேட்கும்,கடல் சுனாமியாய் மாறி கேட்கும்,
தென்றல் சூறாவளியால் கேட்கும்,கவிஞன்
எழுத்துக்கள் தீப்பொறியாய் கேட்கும் ,எழுத்தாளன்
கைவிரல்கள் கூர்மையான வாளாய் மாறிக்கேட்கும்
தமிழ் செய்த குற்றம் என்ன?தமிழை நீர் தூற்ற......
தமிழை மூச்சாய் கொண்டு மூச்சிலும் காற்றாய்க்
கொண்டு வாழும் தமிழ் பிரியர்கள் மத்தியில் தமிழை
களங்கம் செய்து விட்டீரே!என் நெஞ்சம் நின்றுவிட்டது
என் தோழர்கள் கண்கள் ஈரமாய் மாறிவிட்டது.
வீர தமிழச்சி மார்பில் உதிரம் குடித்தவள் தானே!
காலம் செய்த மாறுதலுக்கு என் தமிழ் என்ன பாவம்
செய்தது."தமிழை நேசித்து தெருவிற்கு வந்தேன்"
என்றீர்,உண்மைக்காரணம் தமிழை தூற்றி தெருவிற்கு
வரப் போகிறீர் என்பதுதான் இனியும் தமிழை தூற்ற
வேண்டாம். தூற்றினால் தமிழின் காதலர்கள்
கிளர்ச்சியாளர்களாய் மாறி விடுவர்.
தமிழே! தமிழே! தமிழே! என்னுயிரே!
உன் காயம் ஆற மருந்தாய் பாடுகிறேன் என்னுயிரால்.....,