அவன் தந்த ரோஜா
அவன் கொடுக்கும் ரோஜா எனக்கு ஒவ்வொன்றாய் சொல்லுகிறது.....
மடங்கி இருக்கும் இதழ்கள் அவன் மௌனக் காதல்தனை....
விரிந்து இருக்கும் இதழ்கள் அவன் விழிப்பார்வையினை.....
முகம் திறக்கும்
இதழ்கள் அவன் சிரிப்பினை.....
காம்பில் இருக்கும் முட்கள் அவன் செல்லக் கோபத்தினை....
அட!!அன்புக் கள்வா ...இதை நேரில் சொல்லாமல் ரோஜாவின் வழியே தூது விடுகிறாயே .....
நானும் புத்திசாலி தான் ..... உன் மனதை புரிந்துக் கொள்வதில்......