வார்த்தைகள் தீர்ந்துவிடுமோ - பூவிதழ்

உன் பொய் அழகு என்றாள்
நீ அழகில்லை என்பதில் பொய் இருக்கு என்றேன்
ஹ அஹ ஹ சிரித்தாள்
சிரிக்காதே நீ அழகாய்இருப்பாய் என்றேன்
போடா லூசு கோவமாய் பார்த்தாள்
அதற்காக அழாதே அப்பவும் நீ அழகாய் இருப்பாய் என்றேன்
cute da samaalikiraai என்றாள்
உன்னை வர்ணித்தே
என் வார்த்தைகள் தீர்ந்துவிடுமோ ஒருநாள் என்றேன்
ஏன் பொய்சொல்ல உனக்கு பிடிக்காதா என்றாள்
உன்னைவிட உன் voice அழகு என்றேன்
அதற்காக என்னை பாடசொல்லதே என்றாள்
என் கவிதையை நீ படிபோதுமென்றேன்
உன்னைபோலவே உன் கவிதையும் அழகு என்றாள்
உனக்கு பொய் சொல்லவருமா என்றேன்
பொய் இல்லை இது உங்கவிதையைபோல் என்றாள்