ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பார்த்தால் பரவசம்
பிறக்கும் உற்சாகம்
வனவிலங்கு !

லேசாகும் மனம்
கமழும் மணம்
செல்க வனம் !

இரண்டு எழுத்து இனிது
விலங்குகளின் இல்லம்
காடு !

நல்லவை ஆவதும்
தீயவை அழிவதும்
பெண்ணாலே !

பின்னால் வருவதை முன்னே
சிந்திக்கும் பின் புத்தி
பெண் புத்தி !

அறிவின் பிறப்பிடம்
ஆற்றலின் இருப்பிடம்
பெண்மை !

நாகரிகத்தின் முதல்படி
மொழிகளின் உருவம் படி
எழுத்து !

மாதா பிதா குரு தெய்வம்
தெய்வத்திற்கும் முன்னவர் குரு
எழுத்து அறிவித்தவன் இறைவனுக்கு மேல் !

மொழிக்கு மொழி வேறுபடலாம்
மொழிகளின் உயிர்
எழுத்து !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (6-Mar-15, 10:24 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 137

மேலே