மகளிர் தின நல் வாழ்த்துகள்

மகளிர் தின நல் வாழ்த்துகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிகப்பு நதியில்
பனிக்குடத் திடலில்
பாசப் பிடிப்பில்
கிடந்த என்னை
பூமிக்கு கிடத்தி
மாரூட்டி வளர்த்த
அன்னையெனும் தெய்வமாய் - அவள்

முக சுருக்கங்கள்
விழுந்த பேரழகி
நரைகள் பூத்த
அழகு கிழவி
தலைமுறைகள் கடந்த
ஆதி தாய்
பாட்டியெனும் தெய்வமாய் - அவள்

விரல் பிடித்து
நடக்க பழக்கிய
பால்ய காலத்து
தாவணி தேவதை
என்றுமே அன்பில் நனைக்கும்
அத்தையெனும் தெய்வமாய் - அவள்

செல்ல சண்டைகளில் குட்ட
காய்ச்சலில்
நெத்தி தொட்டு பார்க்க
எப்போதும் என்னுடன்
இருக்க ஏங்கும்
தங்கையெனும் தெய்வமாய் - அவள்

நான் எழுதிட்ட
முதல் கவிதை
எழுத எழுத திராத
காதல் விதை
என் மாமருந்து
என் ஊந்துகோல்
காதலியெனும் தெய்வமாய் - அவள்

ததும்பும் அன்பை
மட்டும் கொடுத்து
துக்கம் துடைக்க
துணையிருந்து
தோல் சாயும்
தனி சொர்க்கம்
தோழியெனும் தெய்வமாய் - அவள்

காதலின்றி
காசுக்கு கூடி இரையாகி
சதை விற்று
காயங்கள் வாங்கி
வேற்றுமை விடுத்து
சமத்துவம் போற்றும்
விலைமாதரெனும் தெய்வமாய் - அவள்

மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டும்..
மங்கையராய் பிறந்தற்கே
தெய்வமாய் போற்றிட வேண்டும்..
பெண்மையை போற்றுவோம்!!

மகளிர் தின நல் வாழ்த்துகள்

- கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (8-Mar-15, 5:40 am)
பார்வை : 3280

மேலே