தேடல்

தேடி தேடி தேய்ந்து சோந்து போனதால் தேட தோன்றியது தேடலின் தோற்றத்தை !
தேடலை தேடி ஓட ஆரம்பித்த பொது
உள்ளிருந்து ஓசை வருவதை உணர்ந்தேன் !
ஓடுவதை வெளியே நிறுத்திவிட்டு
ஓடஆரம்பித்தேன் உள்ளே !
ஓடினேன் உள்ளே ஓசையை தேடி ,
இறுதியில் ,
ஒட்டுபவனே ஓசை தருகிறேன் என்பதை
ஒத்துக்கொண்டான் !
வாதாட ஆரம்பித்தேன் பேசுபவனை வைத்து
பேசசொல்பவனுடன் !
எதற்காக இந்த தேடல் ?
எதை தேடி இந்த தேடல் ?
என்று முடியும் இந்த தேடல் ?
என்று,வினாக்களுக்கு பதில்களை
தேடினேன் அவனிடமிருந்து !
தேடுகிறாய் இதையும் ,
தேடலின் தோற்றமே, என்றது !
தேடல் ஏன் ? என்றேன் ,
தேடலே உன் கடமை என்றது !
தேடலுக்கு முடிவு தான் எங்கே ?என்றேன் ,
தேடலுக்கு தொடக்கமும்யில்லை ,முடிவும்யில்லை என்று,
மேலும் ,
முடிவில்லா முடிவுக்கு இதுவே
முடிவு என்று சொல்லி முகத்திரை போட்டுக் கொண்டது !

எழுதியவர் : manikandan (8-Mar-15, 8:58 pm)
சேர்த்தது : மனி81
Tanglish : thedal
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே