ஒரு கவி எழுத =0= குமரேசன் கிருஷ்ணன் =0=

இரவுவேண்டுமெனக்கு
இனியதொரு கவிஎழுத....

பகலிலும்
பலநேரமெழும்...

பணிச்சுமையால்
பிறகு எழுதலாமென
மூழ்கிடுவேன் பணியில் ...

வெற்றுக் காகிதத்துடனும்
விரலில் பேனாவுடனும்

கருவைமட்டும் பற்றிக்கொண்டு
வாடி நிற்பேன்...
வார்த்தைகள் வசப்படாது
சிலபொழுது ...

மோட்டர் போடுங்க ...
நல்ல தண்ணி வருதுங்க
மனைவி அழைத்தாள்

புத்தியில் எதுவோ உரைத்தது
வரும்போதுதான் எதையும்
பிடிக்கவேண்டுமென்று ...!
----------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (9-Mar-15, 2:01 am)
பார்வை : 272

சிறந்த கவிதைகள்

மேலே