நேசம்

சினம்கொண்டு
நெருப்பு பூக்களை
சிந்தினாலும்...

வெறுப்பு கொண்டு
விலகி நீ
சென்றாலும் ..

மலர்மாலை ஏந்தி
கைபிடித்த இறுக்கம்
தளரவிட மாட்டேன்

என் முதல் குழந்தையாய்
உன்னை
நேசிப்பதால்...!!

எழுதியவர் : பாரதிகண்ணம்மா (9-Mar-15, 2:56 pm)
சேர்த்தது : பாரதிகண்ணம்மா
Tanglish : nesam
பார்வை : 78

மேலே