அலார அவசங்கள்

5.30 க்கு
அடித்த அலாரத்தை,
5.45 க்கு
ஏற்றி வைத்து,
5.45 ல் அடித்ததை,
6 மணிக்குக் கூட்டி வைத்து,
6 மணி அழைப்பையும்
அலட்டாமல்
புறக்கணித்து,
இன்னுமோர்
ஐந்து நிமிடம் என
காலத்திடம்
கடன் வாங்கி,
இன்னும் சற்று
மெய் மறந்ததில்
ஐந்து
பதினைந்து
ஆகிவிட ,
உள்ளுக்குள்
திடுமென அடித்த
ஓர் அலாரத்தில்
வாரிச் சுருட்டி எழுந்து,
பறக்கப் பறக்கப்
பல் தேய்த்து
மேலும்
பல் மட்டுமே
தேய்த்து,
முகங்கழுவி,
காலையுணவு
புறக்கணித்து,
ஐடி கார்டு
மறந்து வைத்து,
6.30 வண்டி பிடிக்கும்
அவசரத்தில்
இரவின்
தாமத உறக்கத்தை
நொந்து கொண்டே
ஓடிக்கொண்டிருக்கும்
எனது
சோம்பேறித்தனத்தினால்
இந்தக்கவிதையும்
மூச்சிரைக்கிறது !

எழுதியவர் : குருச்சந்திரன் (11-Mar-15, 10:16 am)
பார்வை : 213

மேலே