தமிழ் பெண்களை ஜாமீனில் விட ஆரம்பித்து உள்ளார்கள் சிங்கள காடையர்கள்

தமிழ் பெண்களை ஜாமீனில் விட ஆரம்பித்து உள்ளார்கள் சிங்கள காடையர்கள்....?
குற்றச்சாட்டுக்கள் எவையும் சுமத்தப்படாமல் கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி நிபந்தனைகளுடன் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அது என்னங்கடா உங்க சட்டம்...? ஆமாம் இது கூட சொந்தமாக இல்லை....
இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ஜெயகுமாரி பாலேந்திரன். சமூக ஆர்வலரான இவர், தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், ராஜபக்சே ஆட்சிக்காலத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் ஊட்ட முயன்ற கோபி என்பவருக்கு அடைக்கலம் அளித்ததாக ஜெயகுமாரி கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், தடுப்புக் காவலில் அவர் வைக்கப்பட்டு இருந்தார்.
ஜெயகுமாரி, நேற்று கொழும்பு கோர்ட்டில் நீதிபதி அருணி ஆட்டிகல முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ரூ.2 லட்சம் ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
வெளிநாடு செல்ல ஜெயகுமாரிக்கு தடை விதித்ததுடன், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, தான் வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று ஜெயகுமாரிக்கு உத்தரவிட்டார்.
ஜூலை 7 – ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜராகுமாறும் கூறினார்.
மேலும், பத்மாவதி மகாலிங்கம் என்ற தமிழ்ப்பெண் உள்பட மேலும் 8 பேர் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- இது செய்தி -
அது என்னங்கடா ரூபாய் இரண்டு லட்சம் ஜாமீன்....?
பிரிட்டிஷ்கார நாய்கள் கொண்டு வந்த சட்டம் இது....ரூபாய் இரண்டு லட்சம் இல்லாவிட்டால் விட மாட்டாங்கே....
அப்படித்தானே....
இங்கே தான் பிரிட்டிஷ் அடிமைகள் ஆட்சி செய்கிறார்கள் என்றால் அங்கேயுமா...?
அது என்னங்கடா உங்க சட்டம்...? இந்த சட்டத்தை தீ வைத்து கொளுத்த வேண்டும்...என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்..!
- சங்கிலிக்கருப்பு -