யாப்பு 03 - திரு எசேக்கியல் காளியப்பன்
பா இலக்கணம் சில விளக்கங்கள்
பா விளக்கம்
பல விகற்ப இன்னிசை வெண்பா
கண்டால் மனங்கவரும் காட்சிகள் எல்லாமே
உண்டால் செறிக்கும் உணவாமோ -பண்டே
அறிந்தோர் உரைகேட் டறிந்தபடி நீசெய்!
தெரிந்தே குழிவிழா தே!
அடி:
கண்டால் மனங்கவரும் காட்சிகள் எல்லாமே | ----------அளவடி
உண்டால் செறிக்கும் உணவாமோ பண்டே | --------------அளவடி
அறிந்தோர் உரைகேட் டறிந்தபடி நீசெய் | -------------------அளவடி
தெரிந்தே குழிவிழா தே | ----------------------------------------------சிந்தடி
=== ==
சீர் மோனை
அடி 1 | கண்டால் மனங்கவரும் காட்சிகள் எல்லாமே
---------1 கண்டால் 3 காட்சிகள் | பொழிப்பு மோனை
அடி 2 | உண்டால் செறிக்கும் உணவாமோ பண்டே
---------1 உண்டால் 3 உணவாமோ | பொழிப்பு மோனை
அடி 3 | அறிந்தோர் உரைகேட் டறிந்தபடி நீசெய்
----------மோனை இல்லை
அடி 4 | தெரிந்தே குழிவிழா தே
----------1 தெரிந்தே 3 தே
===
அடி மோனை
மோனை இல்லை
====
சீர் எதுகை
அடி 1 | கண்டால் மனங்கவரும் காட்சிகள் எல்லாமே
எதுகை இல்லை
அடி 2 | உண்டால் செறிக்கும் உணவாமோ பண்டே
----------1 உண்டால் 4 பண்டே | ஒரூஉ எதுகை
அடி 3 | அறிந்தோர் உரைகேட் டறிந்தபடி நீசெய்
----------1 அறிந்தோர் 3 டறிந்தபடி | பொழிப்பு எதுகை
அடி 4 | தெரிந்தே குழிவிழா தே
----------எதுகை இல்லை
அடி எதுகை
----------1 கண்டால் 2 உண்டால்
அசை-சீர்:
கண்/டால்/ மனங்/கவ/ரும் / காட்/சிகள்/ எல்/லா/மே/
நேர்/ நேர்/ நிரை/ நிரை/ நேர்/ நேர்/ நிரை/ நேர்/ நேர்/ நேர்
தே/மா கரு/விளங்/காய் கூ/விளம் தே/மாங்/காய்
உண்/டால்/ செறிக்/கும்/ உண/வா/மோ பண்/டே/
நேர்/ நேர்/ நிரை/ நேர்/ நிரை/ நேர்/ நேர்/ நேர்/ நேர்
தே/மா புளி/மா புளி/மாங்/காய் தே/மா
அறிந்/தோர்/ உரை/கேட்/ டறிந்/தப/டி/ நீ/செய்
நிரை/ நேர் / நிரை/ நேர்/ நிரை/ நிரை/ நேர்/ நேர்/ நேர்
புளி/மா புளி/மா கரு/விளங்/காய் தே/மா
தெரிந்/தே/ குழி/விழா / தே !
நிரை/நேர்/ நிரை/நிரை/ நேர்
புளி/மா/ கரு/விளம்/ நாள்
==
தளை:
சீர்கள் ----------------- வாய்ப்பாடு - -அசை ---- தளை
கண்/டால்/ - மனங்/கவ/ரும்/ தேமா - நிரை இயற்சீர் வெண்டளை
மனங்/கவ/ரும்/ - காட்/சிகள்/ கருவிளங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
காட்/சிகள்/ - எல்/லா/மே/ கூவிளம் - நேர் இயற்சீர் வெண்டளை
எல்/லா/மே/ - உண்/டால்/ தேமாங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
உண்/டால்/ - செறிக்/கும்/ தேமா - நிரை இயற்சீர் வெண்டளை
செறிக்/கும்/ - உண/வா/மோ/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
உண/வா/மோ/ - பண்/டே/ புளிமாங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
பண்/டே/ - அறிந்/தோர்/ தேமா - நிரை இயற்சீர் வெண்டளை
அறிந்/தோர்/ - உரை/கேட்/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
உரை/கேட்/ - டறிந்/தப/டி/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
டறிந்/தப/டி/ - நீ/செய்/ கருவிளங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
நீ/செய்/ - தெரிந்/தே/ தேமா - நிரை இயற்சீர் வெண்டளை
தெரிந்/தே/ - குழி/விழா/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
குழி/விழா/ - தே/ கருவிளம் - நேர் இயற்சீர் வெண்டளை
====
விதி பொருத்தம்
ஈற்றடியின் ஈற்றுச்சீரைத் தவிர்த்து ஈரசைச்சீர்களும்
காய்ச்சீர்களும் மட்டுமே பயின்று வருதல் வேண்டும் பொருந்துகிறது
வெண்டளைகள் மட்டுமே பயின்று வருதல் வேண்டும் பொருந்துகிறது
ஈற்றடி மூன்று சீர்களும் ஏனைய அடிகள் நான்கு சீர்களும்
கொண்டிருத்தல் வேண்டும் பொருந்துகிறது
ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகியவற்றுள்
இருத்தல் வேண்டும் பொருந்துகிறது
________________________________________
4 அடிகளுடன் 3 விகற்பங்கள் கொண்டு தனிச்சொல் பெற்று வந்ததால் பல விகற்ப இன்னிசை வெண்பா ஆயிற்று
--------- கட்டுரை ஆக்கம்: திரு எசேக்கியல் காளியப்பன்
பின் குறிப்பு: இது திரு எசேக்கியல் காளியப்பன் அவர்கள் படைப்பு. கருத்து கூற விரும்புபவர்கள் அவர் படைப்பு kavithai/231712 -ல் கருத்திடவும்.
(இங்கு கருத்திட இயலாது )