நட்பு =காதல் =அன்பு தொடர் =பகுதி -1

..நட்பு அல்லது காதலில் தொலைந்தவர்கள் மற்றும் நட்பை அல்லது காதலைத் தொலைத்தவர்களுக்கானது..

ஒரு வேளை இனி அதில் (ஈ) எடுபட உள்ளவர்களுக்கும் அல்லது ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இத் தொடர்
உரியதாக இருந்தால் நான் பொறுப்பல்ல...!!! )

***************--------------------------*******************************

$$$$$$ மீண்டும் சந்திக்கிறேன் உன்னை
வெகு காலத்திற்குப் பிறகு.
நினைவுகள் மட்டும் சென்று....
திரும்புகின்றன
பழைய பாதையில்....
ஒரு பழகிய வண்டி மாடாய்.

நாம் திரிந்த வானம்...
நம்முடையதாய்க் களித்த நிலம்...
எல்லாமே சிதைக்கப் பட்டிருந்தது...
உருத்தெரியாமல் பிய்த்தெறியப்பட்ட
காலத்தைப் போல.

----------------ரமேஷாலாம் (03.09.2012)

----------------------------------------------------------------------------

• தொகுப்பு என்பதற்கும் தொடர் என்பதற்கும் சிறு வேறுபாடுகள் உள்ளன... ,

• தொகுப்பு வனம் போல் வகைகள் இருப்பின் பலரையும் வசீகரிக்கும் ! - பல தலைப்புகளின் சங்கமம் ஒரு தொகுப்பு.• ஏதோ ஒரு நிகழ்வின் பாதிப்பு ஒவ்வொரு தலைப்பிலும் இருக்கும்.

அன்றியும் தொடர் என்பது ஒரு நிகழ்வின் நிழல். தொடரில் ஒளிந்திருக்கும்.
தொடரில் ஒற்றை நிகழ்வின் பன்முகபாதிப்பு இருக்கும். பன்முக சங்கதிகள் இல்லாமல்
ஒருமுகபோக்காக ஒரு தொடர் அமைந்தால் அதை வரவேற்கும் படிப்பாளிகளும் விரும்பாத வாசகர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

• தவிர படைப்பாளியின் படைப்புத்திறனும் மதிப்பீட்டுக்குரிய களத்தில் சற்றே சிரம சிலந்தி வலைப்பின்னல் வரும். • ஆனால் இத்தொடர் எந்த ஒரு மனிதனுக்கும் சிக்கலான ஓர் உறவு பற்றியது……அந்த உறவு தான் காதல் அல்லது நட்பு !

• பலர் இதில் மூழ்கி இன்றளவும் மீளாமல் உள்ளனர் ­ கடல் கொண்ட பண்டைய ஊர்களைப் போல்!

சிலர் அவ்வப்போது கரை ஒதுங்குவதும் மீண்டும் மூழ்குவதுமாய் இருப்பர் ­ சுனாமியின் கண்ணாமூச்சி ஆட்டம் போல்!

• ………..இப்படி பல சங்கதிகள் உங்களிடமும் இருக்கலாம் இச்சங்கதிகளின் பின்புலத்தில் இருக்கும் உறவு-நட்பு !

• மிகச் சிக்கலான உறவு! எப்படி நட்பை-காதலைத் தொடர்வது என்பது வெகு சிலருக்கே கைக் கூடி வருகிறது ! பலருக்கும் ஒரு முயற்சியாகவே வாழ்வின் இறுதி வரை இருந்து விடுகின்றது!

• யோசிக்காமல் நேசிப்பது நட்பில் (காதலில் ) மட்டுமே!
• நேசித்ததை யோசிக்காமல் பாசம் பூசி இரு(ற)க்கும் வரை காப்பதும் நட்பில் (காதலில் ) மட்டுமே!
• ஆனால் பலருள் இது பொய்யானது! ஏன் எனில் யோசிக்காமல் நேசிக்கப்பட்டவ(ன்)ள் அவ்வப்போது யோசித்து யோசித்து நட்பு (காதல் ) சங்கிலியை உடைத்து வதைத்து ஒரு சந்ததி சங்கடத்தை அளித்தால் நட்பு (காதல் ) என்ன செய்யும் !

வாருங்கள் , தொடருக்குள் செல்வோம்...இனி நட்பு என்பதை நண்பர்களும் ,காதலர்கள், நட்பு என்பதைக் காதல் என்றும் கொள்க ..

(1)

தூக்கங்கள் துண்டுபோடத்
துக்கங்கள் படுக்கையானது.....!

கனவுத்துகள்களாய் நம்
சினேகித நாட்கள்.
தூக்கங்களூடே,...!!

நட்புத் தீப்பிழம்புகளின்
சுட்ட வடுக்கள்.....!!

கனவுக் காயங்களில்
வழிந்தோடுகிறது நினைவுக்குருதி......!!

சுட்ட வடுக்களில்
சுடும் சாம்பலை ஊதினேன்,
சங்கதிகள் பல ஒளிர்கின்றன...

அவை
தொலைந்தவையா...தொலைத்தவையா....???

சொல் .

இன்னும் கண்டுப்பிடிப்போம்..-அகன் .

எழுதியவர் : அகன் (11-Mar-15, 6:44 pm)
சேர்த்தது : agan
பார்வை : 327

மேலே