மழையமுதே

மழையவள்....!
விண்னகம் தரும் -
கொடையே...!
மண்னகம் பெறும் -
யாசக மழையே....!
நீலவான் வெளியின்
மேகநீர் நதியே....!
மின்னல் கீற்றென
பின்னலிடும் ஒளியே..!
மேள தாள நடையாய்
நுடங்கும் மேதினி இடியே..!
உன்னில் நனைந்து
கரையாத -
இந்த மண்ணை..
என்னை....!
சந்தனச் சாரலாய்
தொடு வதேன்....?
மெல்ல -
சுடுவதேன்....!