வாழ்வின் வலி
![](https://eluthu.com/images/loading.gif)
வலிகள் தந்து போன கடவுளே
வழிகளைத் தர மறுத்ததேனோ
வலியுடன் வழியின்றிக் கடக்கும் வாழ்க்கைக்கு
நீயே வழிகூறு..
மாற்றார் வாழ்க்கையெல்லாம் மகிழ்வாகிப்போன போது
என் வாழ்க்கையில் மட்டும்
ஏன் இந்த வலிகள்..??
என் வலி கண்டு
உன் விழிகள் கலங்கும் வரை
விடை தருமோ
என் கவி வரிகள்..!!