வலைதளப் பூக்கள்

“பில்கேட்ஸ்”-ன் பிரசவக் குழந்தையே !
உலகச் சந்தையின் அவசரத் தந்தையே !
பில்லியன்களில் புரளும் உற்சவ மூர்த்தியே !
சுள்ளான்களை கவரும் நவின விஞ்ஞானியே !

பெட் ரூமில் புரண்டுக் கொண்டே
“பீட்சா”-வுக்கு ஆர்டர் கொடுப்பாய் !
பாத் ரூமில் குளித்துக் கொண்டே
“நாசா”-வுக்கு ராடர் அமைப்பாய் !

ஆழாக்கு அளக்கும் ஆயாக்களுக்கும்
|”பேஸ்புக்”-கில் அக்கவுண்ட் துவக்கும் பேரக் குழந்தைகள் !

வீனாய்ப்போன காதலூக்காக இளம் ஜோடிகள்
|”டுவிட்டர்”-ல் போடும் சேட்டை ஸ்டேடஸ்ட்டுகள் !

வழிதவறிப்போகும் வீதி வாகனங்களை
சரியானப் பாதையில் அழைத்துச் செல்லும்
கூகுள்”- மேப்பின் மேதாவித் தனங்கள் !

நொடியில் நடக்கும் நிகழ்வுகளை திரையில் காட்டும்
“யாகூ”-வின் நேர்த்தியான நிழற்படங்கள் !

சாதனைப் புரியும் சாமான்யன்களின் திறமைகளை
வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும்
“யூ டுயூப்”-ன் சின்னத் திரைகள் !

மறந்துப்போன பழைய நட்புகளை துருவித்தேடி
புதிதாய் புதுப்பிக்க வகைசெய்யும்
“லிங்கேதனின்” சந்தோஷப் பகிர்வுகள் !

கண்சொடுக்கும் நேரத்தில் விண்வழி வந்து
கடிதப் போக்குவரத்தை எளிதாக்கும்
“ஈ மெயில்”-களின் மாய ஜாலங்கள் !

உலோகப் பறவையின் முதுகிலேறி விண்வெளிச்சென்று
கிரகங்களை ஆராயும் செயற்கை கோள்களின்
உதவிக்கரம் இல்லையெனில் இந்த உலகமே
சூன்யப்போர்வை போர்த்தித்தூங்கும் சோம்பல் முதலைகள் !

நீ இல்லாத ஒரு நிமிஷத்தை நினைத்துப் பார்ப்பதென்பது
காதலியை தொலைத்துவிட்டு தாடி வளர்த்தலையும்
காதலனைப் போன்ற மரண அவஸ்த்தைகள் !

துப்பாக்கி முதல் துப்பட்டா வரை
ஒவ்வொன்றின் செய்முறை தொழில் நுட்பங்களை
பாமரனும் அலசி ஆராயும் எளிய வழிமுறைகளை
விரல்நுனியில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்
வலைதள ஆவணங்கள் !

மனிதனோடு மனிதனாய்
வாழ்க்கையோடு வாழ்க்கையாய்
விஞ்ஞான வலைதளப் பூக்கள்
அய்க்கியமாகிவிட்ட அதிசயத்தை
அன்னாந்துப் பார்த்து
அடக்கித்தான் வாசிக்கிறது அய்ந்தறிவு ஆத்மாக்கள்.

எழுதியவர் : இரா.மணிமாறன் (15-Mar-15, 6:27 pm)
பார்வை : 60

மேலே