அநாதைகள்
அநாதைகள்
இவர்கள்
முகவரியைத் தொலைத்த
முகில் கூட்டங்கள்
வாசனையிழந்த மலர்கள்
பாதுகாப்பற்ற பொக்கிஷங்கள்
ஆராதிக்க
ஆளில்லா தெய்வங்கள்
விளையாடி மகிழ
பூங்கா இல்லாத பூக்கள்
வீதி உலா வந்து விட்ட
தேரில்லா சிலைகள்
காலன் போட்ட
அவசரக் கணக்கில்
பிழையாய் கிடைத்த
விடைகள்.