நீலக்குயில் தேசம்28---ப்ரியா

சுற்றுலா சென்ற மாணவிகளில் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போக வேறு ஒரு அறையில் தங்கியிருக்கும் அவளது தோழியிடம் மருந்து இருப்பதாய் கூறியதால் மருந்து வாங்க அந்த அறைக்கு சென்றனர் ஷீபாவும் அவர்கள் அறையில் தங்கியிருந்த இன்னொரு பொண்ணும்......அங்குபோய் இவளது மருந்து மாத்திரைகளை வாங்கிவிட்டு திரும்பி வரும் சமயம் பக்கத்திலிருந்த ஒரு அறையில் கயல்விழி பற்றிய பேச்சு அடிபடவே அப்படியே நின்றுவிட்டாள் ஷீபா...?

"டேய் மச்சி கயல்விழி செம்ம பீஸ்டா எப்டியாவது டூர் முடியுறதுக்க முன்னால அவள அடைந்தே தீரணும்" என்றது ஒரு குரல்.

"என்னடா இவன் நம்மள கூட வச்சிட்டு அவன் மட்டும் அனுபவிப்பேன்னு சொல்றான் அப்போ நாங்கெல்லாம்"இது இன்னொரு குரல்.

எல்லாருக்கும் தான்டா! ஆஅனால் என்னதான் இருந்தாலும் அவ என் ஆளு அதனால பக்குவமாய் பேசி அவளை என் வசப்படுத்திட்டு அப்புறம் பார்த்துக்கலாம் என்றது முதல் குரல்........டேய் மச்சி நான் உண்மையிலேயே காதலிக்குறேன்னு நினைச்சிதான் என்ன நம்பி கயல்விழி என்கூட பழகுற என் பார்வையாலேயே இதுவர அவள கவுத்துட்டு வாரேன் நம்ம விஷயம் முடிஞ்சதும் விட்டுட்டு போயிட்டே இருக்கணும் அழகின்னு அவளுக்கு திமிரு வேற ஜாஸ்திடா.....அதனால அவளுக்கு பாடம் கத்துக்கொடுக்குறேன் என்றது அந்தே முதல் குரல்.......வெளியில் இதையனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஷீபாவுக்கு நன்றாக புரிந்தது இது ராகேஷ் தான் என்று அவர்கள் அனைவரும் குடித்துவிட்டு தாறுமாறாக பேசுகின்றனர் என்றும் தெள்ளத்தெளிவாய் புரிந்தது.

அப்பொழுது அவள் ரூமிலிருந்து மேம் அழைக்க அந்த இடத்தை விட்டு நகரமுற்பட்டாள் இப்பொழுது மீண்டும் ஒரு புதுக்குரல்.......

"அடப்பாவி ஏன்டா இப்டி இருக்கீங்க கயல் ரொம்ப நல்லப்பொண்ணுடா நான் கூட அவ நல்லவ இல்லன்னு நினச்சி பலமுறை அவளை பழிவாங்க நினைத்திருக்கேன் இப்பொழுதுதான் அவள் மனதை முழுவதும் புரிந்து கொண்டு அவளுக்கு புடிச்ச வாழ்க்கை அமையட்டும்னுதான் ஒதுங்கியிருக்கேன்" என்றது இந்த குரல் கொஞ்சம் கம்பீரமான குரலாகவே இருந்தது ஆனால் இது யாரோட குரல் என்று ஷீபாவால் யூகிக்க முடியவில்லை.....??

மெள்ள அங்கிருந்து நகர்ந்து அறைக்கு சென்றாள்......பரபரப்பாக இருந்த அவர்களது அறை சிறிது நேரத்தில் அமைதியாகி அனைவருமே அவரவர் படுக்கையில் போய் படுத்தனர்.

தன் தோழியின் அருகில் வந்து படுத்துக்கொண்டாள் ஷீபா.

கயல் நான் ஒன்னு சொல்றேன் கவனமா கேட்டுக்கோ?வருத்தப்படக்கூடாது, உன் பாதுகாப்பிற்காகதான் இப்போ இந்த விஷயத்தை சொல்றேன் பொறுமையாக்கேளு என்றாள்....ஷீபாவின் மெல்லிய வார்த்தைகளை கேட்ட தோழி அஜியும் கயல்விழியோடு இவளது பேச்சை கேட்க ஆயத்தமானாள்.........

பக்கத்து அறைக்கு மருந்து வாங்க போனது முதல்...............................................அந்த அறையில் கேட்ட பேச்சுக்கள் வரை அனைத்தையும் மூச்சு விடாமல் சொல்லிமுடித்தாள்.

அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த கயல் எதுவுமே பேசாமல் இருந்தாள்.

"ஏய் கயல் என்ன நான் சொன்னது கேட்டுச்சா இதெல்லாமே ராகேஷ் தான் பசங்க கூட பேசிட்டிருந்தான் அந்த இன்னொரு குரல்தான் யாரோடதுன்னு தெரில" என்றாள் ஷீபா.....!

ஏன்டி இப்டி சொல்றா இங்கப்பாரு அவன் இப்போ கூட என்கிட்டதான் மெசேஜ் மூலம் பேசிட்டிருக்கான் பாரு என்று ஷீபா சொன்னதை நம்பாதவளாய் தன செல்போனை எடுத்துக்காட்டினாள்.

அப்போ நான் பொய் சொல்றேன்னு நினைக்குறியா? என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்...?

இல்லடி நீ ராகேஷ்ன்னு நினைக்குற நான் வேற யாருமோன்னு நினைக்குறேன்?

ஏன்? இப்படி என்னை தவறாக பேசியது அந்த அசோக் சார் இல்லன்னா வேற பசங்களா இருக்கக்கூடாது என்று தன எண்ணத்தைக்கூறினாள் கயல்.

இப்பொழுதுதான் ஒரு உண்மை ஷீபாவுக்கு பிடிபட்டது.

ஆமாடி அசோக் சார் குரலேதான்.........ஆனால் தவறாக பேசியது கண்டிப்பா ராகேஷ் தான் அவனைத்திட்டி உன்னை புகழ்ந்து பேசியதுதான் அசோக் சார் என்று ஆணித்தரமாய் அடித்துப்பேசினாள் ஷீபா.

கயலுக்கு ஷீபா தன் காதலன் ராகேஷை இப்படி பேசியது சுத்தமாக பிடிக்கவில்லை.

வேணாம் ஷீபா அவன் எப்டியும் இருந்துட்டுபோகட்டும் என் காதலன் வருங்கால கணவன் அதனால அவன் அப்டி சொல்லிருப்பான் நீ இனி அவனை தப்பா பேசாத என்று ஷீபாவை கடிந்து கொண்டாள் கொஞ்சம் ஆவேசமாக.......

சரி நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேன் இனி உன் விருப்பம், உன் காதலன் மட்டும் உன்னை அடையணும் உன்கூட சந்தோஷமா இருக்கணும்னு நினைக்குறது தப்பில்ல எல்லாருக்கும் விட்டுக்கொடுக்குறேன்னு சொல்றதுதான் தப்புன்னு சொல்றேன் அவன் உண்மையிலேயே உன்னை காதலிக்கவில்லை என்று என்னால் நிரூபிக்கமுடியும் என்று மறுபடியும் சொன்னாள்..

இப்பொழுது ரொம்ப கோவமான கயல்.

நிறுத்து ஷீபா.... என்று கத்தினாள் அந்த அறை முழுவதும் இவளது சத்தம் நிரம்பியது அனைவருமே திடுக்கிட்டு எழும்பினர் அந்த மேம் உட்பட எல்லாரும் என்ன?என்ன?என்று கேட்க ஆரம்பித்தனர் ஒன்றும் இல்லை மேம் மன்னித்துவிடுங்கள் சும்மா பேசிட்டிருந்தோம் கோவத்துல கத்திட்டேன் என்று மன்னிப்பும் கேட்டாள்.

கயல் இப்படி பண்ணியது ஷீபாவுக்கு மிகுந்த வேதனையை அளித்தது.அஜியும் கயல் மேல் வெறுப்புக்கொண்டாள் இருந்தும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருவரையும் சமாதானம் செய்தாள்.

காதலன் வந்த மயக்கம் தோழியையே தொலைத்துவிட்டாய், ஒரு நல்லவனுக்காக எதையும் தியாகம் செய்யலாம் ஆனால் ஒரு கெட்டவனுக்காக உயிர்த்தோழியை தியாகம் செய்த பெருமை உன்னை சேரட்டும் அவன் கெட்டவன்னு தெரியும் போது இப்போ நடந்தத நினச்சி நீ வருத்தப்படத்தான் போறா கயல் என்று கண்ணீருடன் கூறினாள் ஷீபா.

ஷீபா அது வந்து.......என்று அவளிடம் சமாதானமாய் பேச சென்றாள் கயல் ஆனால் கயலை ஒரு வார்த்தைக்கூட பேச விடாது தடுத்தாள்.

இனிமேல் தயவு செய்து என்னிடம் பேசாதே என் முகத்துலயே முழிக்காதே என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து விலகினாள் ஷீபா.

அடுத்தநாள் காலை சீக்கிரமாக கிளம்பி மாணவர்களை தனி செக்ஷனாகவும் மாணவிகளை தனியாகவும் ஒரு கட்டுப்பாட்டுடன் அழைத்து சென்றனர் பொறுப்பான ஆசிரியர்கள்.....முதலில் மைசூர் மிருகக்காட்சி சாலைக்கு அழைத்து சென்றனர் கொள்ளைகொள்ளும் அழகு.

மனதில் என்னென்னவோ சோகமிருந்தும் அனைத்தையும் மறக்கடிக்க வைத்தன அந்த அழகிய உயிரிகள்........கண்ணைமயக்கும் அழகிய பலவண்ண பறவைகளும் விலங்குகளும் என மிக அழகாய் மனதை இதமாய் வருடிச்சென்றது அந்த இயற்கையும்தான்.........

எத்தனையோ முறை கயல் ஷீபாவிடம் பேச நெருங்கியும் கோவக்காரத்தோழி இவளைக்கண்டுகொள்ளவே இல்லை.

ராகேஷ் ஒருப்பக்கம் செல்ல இவர்கள் மறுப்பக்கம் செல்ல இருவரும் கண்ணால் நலம் விசாரித்துக்கொண்டனர் இருவரும் புன்னகையால் காதல் பாஷை பரிமாறிக்கொண்டனர்.

கயலின் தோழிகளுடன் அவள் சாப்பிட அங்கு அமர்ந்த அந்த நொடி அங்கு வந்து கயலை அழைத்தது ஒரு ஆண்குரல்.........???







தொடரும்..........!

எழுதியவர் : ப்ரியா (17-Mar-15, 4:00 pm)
பார்வை : 419

மேலே