இசை யுகதின் இளையராஜா

நுன் ஈர விரல்கள் பிரசுரித்ததெல்லாம்,

என் அந்தி பொழுதுகளையும்....

வெளிர் காலைகளையும்...

கருமை திரியும் இரவுகளையும்...

களவு செய்வதனை கண்முன் காண்கிறேன்.....

சரஸ்வதி உன் கொத்து விரல்களில் கூடி..

எம்மை பல துகளாய் பெயர்த்து,கோர்கிறாள்...

பனி முத்தம்
எம் கண்ணத்தில் பதிக்கிறாள்...

பரிதவித்து போகிறேன்...

பசலை நோய் கொண்டால்,
மெருகேற்றும் கீதம் கொணர்கிறாய்....

காதல் வயத்தில் லயிக்கிறேன்....

உம் பாட்டால்,
கருவுக்குள் இருந்து நிதமும் பிரசவிக்க படுகிறேன்...

என் ஆவிக்குள் அசைபோடும் இராகங்கள்,

உம் கரங்களுக்குரியது..

உம் இரசனை ஓடைக்குரியது...

கவி மகனே..

இசையின் இளவலே...

இளையராஜா,

நுன் பெயரின் பசுமை,
எம் திசுக்களில் ஆழ தைக்க பட்டது...

நுன் விரல் பிடித்தே என் கால் நகர்த்தி வந்தேன்..

வாழி நீ...

எழுதியவர் : சிவசங்கர்.சி (17-Mar-15, 7:59 pm)
பார்வை : 1475

மேலே