பாரத மாதாவிற்கு மீன் வறுவல்

நீலநிறத்தினை உடுத்திக்கொண்ட
இந்தியப்பெருங்கடலில்
பசியெடுத்த படகுகள்
செல்வதுண்டு. செலுத்துவதுமுண்டு

சென்ற படகுகளில்
வகைவகையான மீன்களும்
சில சமயம் மீனவர்களும்
உயிர் துடிதுடிக்க வருவதுண்டு.

மீனவனே! நண்பனே!
இலங்கை துப்பாக்கிக்கும்- நமது
இறையாண்மைக்கும்
வேறுபாடுகள் அதிகமில்லை.

அடுத்த முறையும் மீன்பிடிக்க செல்
மீன் பிடிப்பட்டு வந்தாலும் -
நீ பிணமாகி வந்தாலும்
வறுத்து கொரித்து உண்ண
தயாராகவே இருக்கிறாள்
பாரத மாதா.!

எழுதியவர் : அமுதினி (17-Mar-15, 8:16 pm)
பார்வை : 98

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே