புன்னகை
நெஞ்சத்து வலியெல்லாம்
மஞ்சத்தில் உறங்க வைக்கும்-
நேசம் என்னும் உறவு கொண்டு
பாசம் தன்னை பூக்க வைக்கும்!
உதட்டோரம் புன்னகை
உலகம் தன்னை அடிமை ஆக்கும் –
அன்பு என்னும் மந்திரத்தால்
அகிலம் தன்னை ஆட்சி செய்யும்!
அலைகடலின் ஆர்ப்பரிப்பும்
அமைதியாக அடங்கி போகும் –
சுட்டெரிக்கும் சூரியனும்
மேகத்திடையே ஓடி ஒளியும்!
கண்ணாடி முன்னே நின்று
கணநேரம் புன்னகை செய்தால்
காலை முதல் மாலை வரை
காரியங்கள் கை கூடிவரும்!
உன்னைப்பார்த்து நீயும்
ஒருமுறையேனும் புன்னகை செய் –
நல்லநேரம் உனக்கும் உண்டு –
நம்பிக்கையுடன் விடியும் பொழுது!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
