பூக்கள்

மொட்டுகளாய் பறிக்கப்பட்டு
உயிரும் தான் பிரிந்தாலும்
ஒருநாள் வரையேனும்
மணம்வீசி வாடுகின்றாய்!

உன் மூச்சை நிறுத்துகின்ற
என் இனத்தின் கொலைவெறியும்
மன்னிக்கும் விதமாக
மணம் பரப்பி மடிகின்றாய்!
நீரூற்றி வேர்வளர்த்த
விவசாயியின் வியர்வை மணம்-
வீணாகக் கூடாதென்று
விதி முடிந்தும் மணம் தருவாய்!

ஆயுளுக்கும் மனித இனம்
அறியாத புதிரை யெல்லாம்
ஒருநாளின் வாழ்வினிலே
உலகினுக்கு புரிய வைப்பாய்!

எழுதியவர் : சோ.சுப்பிரமணி , குவைத் . (19-Mar-15, 2:46 pm)
Tanglish : pookal
பார்வை : 116

மேலே