வாசமலர்

தங்கைகள்
எப்போதும்
தங்கமலர்களே அண்ணன்களுக்கு!
அன்றலர்ந்த
அழகுமலர் !

செல்லச்சண்டையில்
சினுங்கி அழும்போதும்
அம்மாவிடம்
அற்புதமாய் சமாளிக்கும்போதும்
காக்கா கடி
கடித்துத் தரும்
தேன் மிட்டாய்க்கும்
மொத்தமாய்
பலாரங்களை
அண்ணனுக்கே தரும்போதும்
தேன் மலர்களே!

இரவில்
தாமதாமாய் வீடு
திரும்பும் அண்ணன்களெல்லாம்
தங்கைகளின்றி
தப்பிப்பதில்லை!

அம்மாவிடம்
அவ்வப்போது
செலவுக்கு
சில்லறைத் தேற்றி
தரும் பூதேவிதான்!

அப்பாவிடம்
அடி வாங்கும் போதும்
அதிலும் பங்கு
எடுத்துக் கொள்ளும் போதும்
அந்தப் பூமுகம்
பனித்துளி
ஏற்றதுபோல்
அழகாய்த்தானிருக்கும்!

இந்த
மலர்கள்
இரண்டும்
எப்போதும்
பாசமலர்களே!
வாசமலர்களே!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (19-Mar-15, 3:29 pm)
Tanglish : vaasamalar
பார்வை : 59

மேலே