வரதட்சணை

வண்ண வண்ணச் சேலைகட்டி,
வளையணிந்து வாடாமல்லிச் சூடி,
வரம் கேட்டு திருமண வரம் கேட்டு,
வந்தாள் பெண்ணொருத்தி !
வரும்படிக்கு வழியில்லாதவன்
வம்படியாய் கேட்கிறான் வரதட்சணை1
சொந்தக்காலில் நின்று சாதிக்க துப்பில்லாதவன்
பந்தக் காலை பயன்படுத்தி
பணக்காரன் ஆகப்பார்க்கிறான்!
தன் தகுதிகளால் தன்னை உயர்த்திக் கொள்ளாமல்
தட்சணையால் வரதட்சணையால் அந்தஸ்து தேடுகிறான்!
வர்ணமிட்ட காரும்
வரதட்சணையாய் ஐம்பதாயிரமும் கேட்டு
வந்த ஆண்களை மணம் செய்த
பெண்கள் வாழ்க்கை எல்லாம்
பணத்தினால் வந்த பாசம் தானே
பகட்டோடு வந்தது
பத்து மாதத்தில் தோற்றுப் போனது!
அவர்கள்
மணம் கெட்டுப் போய் நிற்க
மனம் கெட்டுக் கேட்கிறார்கள் வரதட்சணை!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (19-Mar-15, 6:30 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : varathatchanai
பார்வை : 52

மேலே