இழிவானவர்கள்

இரு கை நீட்டி
இரந்து நின்றேன்!
இழிவான நிலைக்கு
வந்துவிட்டோம் என
வருந்தினேன்!
ஒரு நாளெல்லாம்
அமர்ந்தும்
நீட்டிய கை
நீட்டியபடியே தானிருந்தேன்!
ஒன்றும் கிடைக்கவில்லை
என்னை விட
இழிந்த நிலையில் தான்
மற்றவர்கள் என்பதை
புரிந்து கொண்டேன்.