இடுப்பழகி
பாவாடை சட்டை காலமுதல்
பார்த்திருந்தேன் என்னவளை
தண்ணீர் குடம் ஒன்று தூக்கிவர
தளும்ப தளும்ப அவள் இடுப்பில்
கண்கள் கொஞ்சம் ஓடவிட்டேன்
கழுத்து குறுகிய செம்பினை போல்
தாவணி காலத்து என்னவளின்
தள்ளாட வைத்தது இடுப்பழகு
அப்படியே பிறைபோலே அவளது
அரைபக்க இடுப்பினை காணும்போது
தேய்பிறை போலது அவள் வயிறும்
தெரியாது போலத்தான் சுருங்கியதால்
உண்டி சிறுத்தது உண்மையென
பெண்டிரின் பழமொழி தெளிந்ததால்
கொண்டிருந்த கொழுப்புகள் குறைவென
குறும்புகள் செய்வதற்கு கிள்ளிவிட
ஆசைகள் மேலிட ஆசைப்பட்டேன்
ஆனாலும் காலம் வரும் பொறுத்துகிட்டேன்
எப்படியோ இவள்கூட நகரத்திற்கு
ஏதோவொரு காரணத்தால் சென்றுவிட்டு
சுரிதார் அணிந்துதான் சுற்றிவந்தாள்
சொல்லிக்கொள்ள தன்னழகு இடுப்பி லென்றால்
காட்டிவிட்டால் காமம்தான் வருமென்று
காரணம்தான் கூறிவிட்டால் என்ன செய்ய
மூடிவைத்த அவள் இடுப்பும்
முழு நிலவாய் வளர்ந்துவர
மூணு முடுச்சி போடவிட்டார்
முட்டாள் எனக்கு புரியவில்லை
ஒன்பது மாதம் ஓடிப்போக
ஒரு பிள்ளைக்கு அப்பனாக
பெற்றெடுக்க அவள் வயிற்றை
பேசிக்கொண்டனர் கிழித்தெடுக்க
சட்டென்று எனக்கு புரிந்துபோக
சதி செய்த சுரிதார் நினைவுக்கு வர
பெருக்க வைத்த இடுப்பு கொழுப்பு
பிள்ளை பெறத்தான் தடங்கள் ஆச்சு
அரைப்பக்கம் இடுப்பு காட்டி
ஆடையாக சேலை கட்டி
பாவாடை தாவணியில் மாறினாலும்
பழித்திடாத தமிழன் மரபில்
இடுப்பழகை காட்டியிருந்தால்
என்னவளை தடுத்திருப்பேன்
கொழுப்பு மடிப்பு கூடாமலே
குறைத்திருப்பேன் முன்னாடியே
பக்கத்து மாநில நாகரீகம்
பாழ்படுத்திய உடையை போட்டு
காலம்காலமாய் தமிழ் கலாச்சாரத்தை
கங்கணம் கட்டி கெடுத்தனால்
வயிற்றை இப்போ கீறிவிட்டார்
வாரிசு எனக்கு பிறக்கவைத்தார்
உயிர்போயித்தான் மறுபிறவியாய்
உன்னோட மனைவியும் குழந்தையுமென்றார்
என்னென்னமோ சொல்லிவிட்டார்
என் எண்ணமோ புரிந்திருக்கும்
உடலுழைப்பும் உடை உடுப்பும்
ஒருசாண் வயிற்றை பேணிவிட்டால்
இயற்கையான பிரசவத்திற்க்குபின்
இடுப்பில் எதற்கு இத்தனை மடிப்பு
சிந்திப்பதற்கும் செயற்கை வேண்டுமா
செந்தமிழச்சியே சிரிப்பு வருமா ?