சும்மா
கோணிக்குள்ள ஊசி குத்த
சக்தியேதுக்கு நீ சொல்லு
கோணமானிக் கொண்டு அளக்கா
ஒத்த டிகிரி பார்வையால் கொல்லு.
வாசல தெளிச்சு கைய நீயசைக்க
தண்ணியா சிதற நான்.
புள்ளிய வச்சி நீ யோசிச்சுப் பாக்கயில்
கோலமா நெளிஞ்சேன் நான்.
இராப்பகலா உன் நெனப்ப தின்னதால்
எடுக்கல பசியேதும் தான்
காத்தவரயங் கோயிலுக்கு வா
தீர்க்கணும் தாகத்த நான்.
--கனா காணபவன்