மன்னித்திடு எங்களை

கீச் கீச் என்று
ஒலி எழுப்பி
உன்னைக் காணவைப்பாய்!
ஓடி வந்து பிடிக்க
நினைக்கையிலே
சிட்டாய் பறந்திடுவாய்!

வானத்தையே
பாதையாக்கி
விமானமாய் பறந்திடுவாய்!
இறக்கைகள்
எனக்கிருந்தால்
உன்னுடன் பறந்திருப்பேன்!

மரக்கிளைகளில்
கூடு கட்டி
குடும்பம் நடத்தினாய்!
ஊஞ்சல் கட்டி
விளையாட வந்தால்
விரைவில் மறைவாய்!

நீ எங்களை கண்டு
பயந்தே பறந்தாயோ..?
நாங்களோ
எங்கள்
சுயநலத்துக்காக
மரத்தை அழித்து
கூட்டை கலைத்தோம்!

பின்
செல்போன் டவர்
அமைத்து
உன் இனத்தையே
பயங்காட்டி அழித்தேவிட்டோம்!

இன்றோ
எங்கள்
மக்களுக்குக் காட்டி
கற்றுக் கொடுக்க கூட
உன் இனம் இல்லை என்று
வருந்துகிறோம்!

ஓரினத்தை
பயமுறுத்தியே
அழித்துவிட்ட
அரக்கர்கள் நாங்கள்
மன்னித்துவிடு எங்களை!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (20-Mar-15, 8:44 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : mannithidu engalai
பார்வை : 97

மேலே