வாய் விட்டு சிரிங்க

ஒருவன் - தரகரே நான் கட்டிக்க போற பொண்ணு எப்பவும் தலை குனிஞ்சே நடக்கணும்,அவ உதடு செக்க செவப்பா இருக்கணும், அவ சிரிப்பு என்ன மயக்குற மாதிரி இருக்கணும்,எங்க போனாலும் என்ன பிரியாதவளா இருக்கணும் அப்படி பட்ட பொண்ணா பாத்து சொல்லுங்க?


தரகர் - ம்ம்ம்ம் பாத்துரலாம் பாத்துரலாம்



இரண்டு நாள் கழித்து தரகர் அவனை பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அந்த பெண்ணும் வந்தாள் அவளை பார்த்த பின் இவனுக்கு இதயமே வெடித்தது போல் இருந்தது ஆம் அந்த பெண் கூன் விழுந்த கிழவி


ஒருவன் - யோ தரகரே பொண்ணு பாக்க சொன்னா நாளைக்கு சாக போற கிளவிய பாத்துருக்கீங்க என்னய்யா நினைச்சுகிட்டு இருக்கீங்க உங்க மனசுல பொண்ணு பக்க சொன்னது உங்களுக்கு இல்லையா எனக்கு


தரகர் - கோப படாதீங்க தம்பி நீங்க சொன்ன மாதிரிதான் பொண்ணு பாத்துருக்கேன்

இதோ பாத்துகோங்க எப்பவும் தலை குனிஞ்சே தான் நடக்கும்

உதட பாருங்க வெத்துல போட்டு எப்படி செக்க சிகப்பா இருக்குனு பாத்துகோங்க

பொண்ணு சிரிச்ச நீங்க மட்டும் இல்ல உலகமே மயங்கும் வேணும்னா நான் போன பிறகு சிரிக்க சொல்லி காட்ட சொல்ற்றேன் பாத்துகோங்க .


எங்க போனாலும் உங்களா விட்டு பிரியவே மாட்ட ஏன்னா நீங்க அவல உங்க கையாள தூக்கிட்டு போக போறீங்க

எல்லாமே பொருத்தமான பொண்ணு தான் பாத்துருக்கேன்


ஒருவன் - பொண்ண காட்டுறேன்னு தீஞ்சு போன பன்னையா காட்டுற அடேய் தரகா உன் மண்டையா பிளக்காமா போகமாட்டேன்யா இருயா எங்க ஓடுற எந்த ஜில்லாவுக்கு போனாலும் உன்ன விடமாட்டேண்டி இனிமை எவனுக்காவது பொண்ணு பாப்ப...

தரகர் - i am escape

எழுதியவர் : கவிபுத்திரன் (21-Mar-15, 12:03 pm)
Tanglish : kalyaana ponnu
பார்வை : 447

சிறந்த நகைச்சுவைகள்

மேலே