மழை துளிகள் -சகி

மழை துளிகள் ....

மண்ணில் விழும்
நிறமில்லா மழைத்துளியே.....

நீ மண்ணை தொடுகையில்
மண்வாசம் மனமெங்கும் வீச .....

மேகக்கூட்டங்கள் மோதிக்கொண்டு
காதல் கீதங்கள் பாட .....

வானவில்லின் இணைவில்
மலைகள் காதல் மோகம் கொள்ள....

மலைசாரலில் நனைந்த
புல்வெளியின் நுனியில்
வைரமாய் துளிகள் மின்னிட ...

வண்ணதோகைக்கொண்டு
மயிலினங்கள் நடனமாட ....

ஜன்னல் ஓரம் விழும்
மழைத்துளியில் மழலைகள்
கைநீட்டி நனைத்து மகிழ....

தென்றலின் இதமான தீண்டலில்
மர செடிகள் அசைய ....

மழைத்துளிகளை ரசிக்க ரசிக்க
மனதில் உள்ள பாரங்களும்
மறையும் .....

மழையே தினமும்
வந்து செல் உன்னை
கண்சிமிட்டாமல் ரசிக்க .....

எழுதியவர் : சகி (21-Mar-15, 3:10 pm)
பார்வை : 197

மேலே