கோட்டோவிய மழலைகள் ---லெனின்

ஆண் என்றும் பெண் என்றும்
இரட்டை கோடுகள் இணைத்துகீறிய
அழகிய ஓவியம் மழலைகளே

மழலை முகங்களே
மகிழ்வின் குறிகளே
உலகின் பொதுக்கவிதை
மழலை மொழிகளே

பூவிலும் மெலிதாய்
பொலிவுற்ற மேனி -நீ
மௌனம் என்பதே
அறியாத ஞானி

அசையும் பொருட்கள்
உன் தோழர்
அசையா நிலவும் உன்
சிறுவிரல்க்கு அடிமை

கவிசெய்து புவி வெல்லும்
கவி வல்லர் ஆயினும்
உன் மழலை மொழி கேட்பின்
மண்டியிட்டே ஆகணும்

நோயுற்று நான் வீழிலும்
உன் நினைவுண்டு வாழ்ந்தாலே
மருந்துகள் செய்யாமாயம்
உன் மலர்முகம் செய்யுமே

பணமொன்று தேவையாய் -மனதுள்
பதிகின்ற வரையிலே
குழந்தைகள் கடவுளின் நகல்களே

எழுதியவர் : இணுவை லெனின் (21-Mar-15, 3:48 pm)
பார்வை : 170

மேலே