கவலை
கவலை!
காற்றடைத்த பை இது-
கவலைகளை சுமப்பது-
நூலறுந்த பட்டமென
துன்பங்களில் துவளுது!
சூழ்நிலைகளின் கைதி இது-
சூட்சுமத்தால் திணறுது-
காரிருளில் மூழ்கிப்போய்
பேரொளியை மறக்குது!
நிலையற்ற உடலே இது-
நிம்மதியை நாடுது-
எல்லாமே எதிரிருந்தும்
ஏக்கத்தாலே வாடுது!
இருப்பதையே இன்பமுடன்
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
இருந்துவிட்டால் மானுடர்க்கு
கவலைகளும் கண்ணாமூச்சியே!
கவலைகளும் ஆனந்தமும்
உள்ளத்தில் ஒன்றாகட்டும்!
இரவும் பகலும் போலே
இயற்கையாய் நிகழ்ந்திடட்டும்!
சோ.சுப்பிரமணி, குவைத்
23-03-2015.