வீழ்ந்தேன் என்று நினைத்தாயோ

உன் விரலோடு
பின்னிகிடந்த விரல்கள்
பிரிந்து நின்று
இன்று பிரிந்த
சோகம் மீட்டுது.

நான் உரிமையாய்
சாய்ந்து கிடந்த
உன் தோளில்
வேறொருத்தியை
நீ அணைத்து நடப்பதென்றால்?

நீ சிரித்து
நான் ரசித்த நிமிடங்களை
வேறொருத்தி பருகி கிடப்பதா?

என் இதயத்தின்
துடிப்பே நீ என்றிருக்க
நீ நொறுக்கி போனால் ?

சிதைந்த சில்லுகளை
பொருக்கி கொண்டிருப்பேன்
என நினைத்தாயோ?

வீழும்முன் உன்
மெய் பிம்பம்
கண்டு விட்டேன்.

கொஞ்சம் ரணம்
என்றாலும்
ஆறாதது அல்ல.
வடு கூட இல்லாமல்
மாறிவிடும்.

வீழ்வேன் என்று நினைத்தாயோ ?

உன் ஞாபகம் வரும் போதெல்லாம்
வெறியோடு வாழ்கையில்
முன்னேறுகிறேன்.

உன் துரோகம்
சிகரத்தில்
ஏற்றி விட்டது என்னை.
அதற்காக ஒரு நன்றி.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (23-Mar-15, 4:40 pm)
பார்வை : 162

மேலே