என்னவன் நினைவாய் -சகி

என்னவன் ....

என்னவனின் நினைவலைகள்
என் இதயமெங்கும் காதலாய்
நிறைந்திருக்கிறது ....

என் ஊடல்களின்
சொந்தக்காரன்.....

அவன் இதயசிறையில்
மாட்டிக்கொண்டேன் ....

அவன் அன்பை காதல்
மொழியாக தூது விட்டான்....

என்னவனிடம் நான் ரசிப்பதே
என்னை ஆளும் அன்பான
காதலை தான்....

என்னவனை காண விழிகள்
இரண்டும் காத்துக்கொண்டிருக்கிறது ....

காண ஏங்கும் நொடிகளில்
விழிகளில் கண்ணீருடன் ...

துடிக்கும் இதய துடிப்பும்
அவன் நினைவாகவே ....

நொடிபொழுது ஒவ்வொன்றும்
யுகமாகவே நகர்கிறது ...

என்னவன் அருகில் இல்லாத
இந்த நிமிடங்கள் என்னில்....

அவன் வருகையை என்னை
கன்னியிவள் காதலுடன்....

அவன் கரம் கோர்க்க...
காதலியாக அல்ல.....

நாளை மணமேடையில்
அவன் மனைவியாக ...

எழுதியவர் : சகிமுதல்பூ (23-Mar-15, 4:53 pm)
பார்வை : 1735

மேலே