தாயின் நினைப்பு

அம்மா தினம் தினம்
உன்னை பார்க்க வேண்டும் நேரில்...

வாழ்வதற்கு படிப்புதான்
ஆயுதம் என்று பள்ளிக்கு
அனுப்பினாய் ஐந்து வயதில்....

படித்தேன் பல வருடம்
வேலையும் வாங்கி ஆகிறது
சில வருடம்.......

உன்னை விட்டு பிரிந்து
வெகு தொலைவில் வேலை
பார்க்கிறேன் அடிமையாக....

தினந்தோறும் மனக்கவளைகளும் ,
அவமானங்களும் அதிகம் அம்மா..

தினமும் உன் மடியில்
படுத்து அழ வேண்டும் போல்
இருக்கிறது அம்மா....

மேல் அதிகாரிகள்
சொல்லும் ஒவ்வொரு
வார்த்தைகளும் இடியாக
இறங்குகிறது என் நெஞ்சில்...

அதிகாரன் அவன் கையில்
அசிங்க படுவது நான்....

அனைத்தையும் தாங்கிகொகிறேன்
நீ அழ கூடாது என்பதற்காக....

கல், முள் பாராமல்
வெயில், மழை என்று நினைக்காமல்
என்னை ஆளாக்கியது, இப்படி தனிமையில்
அனுப்புவதர்க்ககவா தாயே.....

இப்பொழுது கூட பழகிய
தோழர், தோழிகளும்
புறம் குத்துகிறார்கள்....

நான் பிறந்தது பாவமா அம்மா...

நான் யாருக்கும் எந்த
கெடுதலும் seiyavillaiyea
பிறகு ஏன் எனக்கு மட்டும்
இவ்வளவு வழியும், வேதனையும்...

நான் யாரை எல்லாம் நம்புகிறேனோ
அவர்கள்தான் அதிகம் ஏமாற்றுகிறார்கள்....

அம்மா உன்னை thavira இவ்வுலகில்
உண்மையானவர்கள் எவருமில்லை
உணர்தேன் நண்பர்கள் ஏமாற்றும்போது...

எழுதியவர் : வே.அழகேசன் (23-Mar-15, 8:13 pm)
Tanglish : thaayin NINAIPPU
பார்வை : 79

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே