அழைப்பு

மரம் இல்லை மேகம் வாடி
போகிறது ..மேகம் வாடையில்
பூமி விரிசல் விட்டு வழி விடுகிறது

நீரே எங்கிருந்தாலும் வா!!!

காடுகள் தான் மழைக்கு
பச்சை கொடி காடும்
அதை அழிப்பின் எப்படி

மழையே பூமியை நம்பாதே
உனக்கு தோன்றும் போதுவா!!!

நீர் வாழ நீர் வேண்டும்
நான் வாழ நீர் வேண்டும்
மழையே நீ பூமி வந்துதான்
ஆகவேண்டும்

இல்லையேல் கண்ணீர் அஞ்சலி
அடிப்பார்கள் எங்கள் மனிதர்கள்
உனக்கு

பூமி வந்து மணல் மேடுகளில்
உன் பாதத்ததை வைத்து செல் !!!

நீ இல்லையேல் காய போவது
பூமி மட்டும் அல்ல இதோ
மனித தொண்டை

வறண்டு போவது ஆற்றுபடுகை அல்ல
மனித நாக்கும் தான் பாலைவனம் ஆகும்

வா வா சிறிது நேரம் வா !!!

உன்னை முறையாக பயன்படுத்தும்
இடத்தில் பொழிந்து தள்ளுக மேகங்களே
அப்படி செய்யாத இடத்தில் துளி கூட
சிந்தாதிர்கள்

விளைச்சல் விரும்பும் விவசாய்க்கு பொழிக
உன்னை பிரிந்து கிடக்கும் பாலைவனத்தில் பொழிக
உன்னையே நேசிக்கும் கடலுக்குள் ஒலிக

மழையே வா இவைகளும் பூமியில்
தான் இருக்கிறது மனித மனம்
திருந்தும் நம்பிக்கை கொண்டு வா

வழி மாறாமல் வழிந்தோட வா !!!!

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (23-Mar-15, 8:22 pm)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
Tanglish : azhaippu
பார்வை : 97

மேலே