முறை
எரிந்து முடிந்து,
உருககுலைந்து கிடக்கிறது,
அந்த மெழுகுவர்த்தி,
தன்னையிழந்து தன்மை மறைந்து !
அது,
ஒரு சிறந்த ஒளி தந்து வாழ்ந்து,
முடிந்திருக்கிறது அற்புதமாய்,
அர்த்தமான வாழ்க்கையினை !
மேலும்,
தருவித்தது ஒரு செய்தி !
அழகு தோற்றத்தில் இல்லை !
அது வாழ்கின்ற வாழ்வின் முறையில் !!