நலமே வாழ

உழும்போது மண்ணில்
விழும்வியர்வைத் துளி
உண்மை பேசும் நீர்த் துளி
உழவனின் கஷ்டம் உலகம்
தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை

உண்ணும் போது நம் உணவில்
உழவன் உழைப்பு உணரும்
அது உணரும் மக்கள் நாம்
உளமார நன்றி சொல்வோம் உழவனுக்கு
அந்த நன்றியே அவன் உழைப்பின்
பயனாகும் ஊதியமாகும்

பிரதி பலன் எதிர்பாராது செய்பவன்
உழவன் ஒருவனே
இயற்கையை நம்பி செய்யும் ஒரே தொழில்
உழவுத் தொழில்
உழவன் சோர்ந்து விட்டால்
நாம் வாழ்வது எப்படி

கடவுள் படைத்த படைப்பில் எல்லாம்
முதன்மை வாய்ந்தது உழவுத் தொழில்
முதன்மையானவனும் உழவன் மட்டுமே
பொன்னையும் வைரத்தையும் பொருளையும்
அனுபவிக்க மனிதன் வேண்டுமே
மனிதன் வாழ உணவு தேவை
அந்த உணவை கொடுப்பவன் உழவன்
அவனால் உலகில் உயிர்கள் வாழுகின்றன

நாமும் நாடும் நலமே வாழ
நல்ல உழவன் நமக்கு வேண்டும்
உழவன் நலத்தை நாம் பேண
நாம் கடமைப் பட்டு உள்ளோம்
உழவனே நின் தொழில் வாழ்க
நீயும் உன் வம்சமும் நீடூழி வாழ்க

எழுதியவர் : பாத்திமா மலர் (23-Mar-15, 8:50 pm)
பார்வை : 63

மேலே